அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அமெரிக்காவில் நிலவும் கடுமையான பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக மாசசூசெட்ஸ் பகுதியில் 100க்கும் அதிகமான வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்துள்ளன. பல பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் நிரம்பியுள்ள பனியால் ஆங்காங்கே விபத்துகள் நேர்ந்த வண்ணம் உள்ளன. வாஷிங்டன், புளோரிடா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனி காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

மூலக்கதை