துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ: நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

துபாயில் உள்ள, உலகிலேயே உயரமான அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. துபாயின், மரினா மாவட்டத்தில் அமைந்துள்ள த டார்ச் டவர் குடியிருப்பு கட்டடம், ஆயிரத்து 105 அடி உயரத்துடன் 79 தளங்களை கொண்டது. இதில் 50ஆவது தளத்தில் நள்ளிரவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புப் படையினர், கட்டடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்களை வெளியேற்றினர். தீ விபத்தினால் கட்டடத்தின் கண்ணாடிகள் உடைந்து கீழே விழுந்து வருவதால், அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 50ஆவது மாடியில் பற்றிய தீ, மளமளவென மற்ற தளங்களுக்கும் பரவியதால் கட்டடத்தின் பெரும்பாலான பகுதி உருக்குலைந்திருக்கிறது. இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து துபாய் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை