சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பரபரப்பு!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சர்கார் திரைப்படத்தில் இடம்பெறும் 49P சட்டப்பிரிவு பற்றி பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படத்தில்  சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்று உள்ளன.

சர்கார் திரைப்படத்தின் மூலம், இந்திய தேர்தல் சட்டப்பிரிவு 49P (1961) தமிழக மக்களிடையே நன்கு பிரபலம் ஆகியுள்ளது. சர்கார் திரைப்படம் சம கால அரசியலைச் சொல்வதால், பெரும் விமர்சனத்தை சந்தித்து உள்ளது.  கதையின் கரு என்பது கள்ள ஓட்டு தொடர்பானது.

கள்ள ஓட்டு போட்டுவிட்டார்கள் என்று புலம்பாமல், அதற்கான தீர்வையும் சொல்வதால் பேசப்படுகிறது.  திரைப்பட கதைப்படி, ஹீரோ விஜய், ஓட்டை வேறு ஒருவர் கள்ள ஓட்டு போட்டுவிடுகிறார். அதை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார் விஜய். அப்போதுதான், இந்த தேர்தல் நடைமுறைகளுக்கான சட்டப்பிரிவு 49P பற்றி ஹீரோவே விளக்கம் அளிக்கும் வகையில் காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

 தமிழ் திரைப்படங்கள் எதிலுமே இதற்கு முன்பாக இந்த சட்டப்பிரிவு குறித்து பேசவில்லை என்பதால், ரசிகர்களுக்கு அதன் மீதான ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

49P சட்டப்பிரிவை பயன்படுத்தினால், கள்ள ஓட்டு பிரச்சினைக்கு தீர்வு காணலாமே என்று வலுவான ஒரு யோசனையை திரைப்படம் தெரிவிக்கிறது. அரசியல் மாற்றங்களுக்கு இந்த சட்டப்பிரிவு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதும் விவரிக்கப் பட்டு உள்ளது.

  49P சட்டப்பிரிவு என்றால் என்ன என்கிற கேள்வியை படம் பார்க்காதவர்கள் கேட்கலாம். படம் பார்த்த சிலருக்கும் கூட விளக்கம் தேவைப்படலாம். 

இதுகுறித்து சட்ட வல்லுநர்களிடம் கேட்டால்,  அவர்கள் 49P இந்த சட்டப்பிரிவு நடைமுறையில் உள்ளதுதான் என்று கூறுகிறார்கள்.49P சட்டப்பிரிவு பற்றி, சட்ட புத்தகத்தில் உள்ள விளக்கத்தை தெரிந்து கொள்வோம். 

எந்த ஒரு நபரின் ஓட்டாவது வேறு ஒரு நபரால் பதிவு செய்யப்பட்டுவிட்டால், 49P பிரிவின்கீழ், ஒரிஜினல் வாக்காளரை  வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரத்தின் மூலமாக வாக்கைப் பதிவு செய்ய முடியாது.

வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ளதைப் போலவே, வாக்காளர் பெயர்-சின்னம் ஆகியவற்றுடன் கூடிய காகிதம் தரப்படும். அதில் தான் விரும்புவோருக்கு எதிராக பெருக்கல் குறியிட்டு, அதை மடித்து எடுத்து, தேர்தல் அதிகாரியிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பலாம்.

அந்த வாக்கும்  எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டு என்ற வகையில் சேர்த்துக் கொள்ளப்படும்.  எனவே இதை அறிந்தவர்கள், இனிமேல் எனது ஓட்டை யாராவது போட்டு விட்டார்கள் என்று புலம்பத் தேவையில்லை. கள்ள ஓட்டு பிரச்சினையும் முடிவுக்கு வரும். கள்ள ஓட்டுகளால் கட்சிகள் வெற்றி பெற முடியாது.

இதுதான் 49P சட்டப்பிரிவு, பிரபலமாகப் பேசப்படுவதற்குக் காரணம்.

மூலக்கதை