மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையை போக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

தினகரன்  தினகரன்
மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறையை போக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்

சென்னை: நிலக்கரி பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். மின் உற்பத்திக்கு நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது  குறித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது என்றும் தமிழகத்தின் ஒரு நாள் மின் உற்பத்திக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார்.

மூலக்கதை