ஜெட்லியை சந்தித்தேன்: மல்லையா தகவல்

தினமலர்  தினமலர்
ஜெட்லியை சந்தித்தேன்: மல்லையா தகவல்

லண்டன்: ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடியில், இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு தொடர்பாக விஜய் மல்லையா, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜரானார்.
தொழிலதிபர் விஜய்மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று, தற்போது லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் விஜய் மல்லையா இன்று ஆஜரானார். அப்போது மும்பை ஆர்தர் ரோடு சிறையில் விஜய் மல்லையாவை அடைப்பது தொடர்பாக வீடியோவை நீதிபதி ஆய்வு செய்ய உள்ளார்.

நம்பிக்கை

ஆஜராக வந்த மல்லையா, நிருபர்களிடம் கூறுகையில், கடனை திருப்பி செலுத்த தயாராக உள்ளேன். இதற்கான திட்டத்தை முன்வைத்துள்ளேன். இதனை நீதிமன்றம் ஆலோசிக்கும் என நம்புகிறேன். நாடு கடத்துவது குறித்து முன்கூட்டியே ஏதுவும் கூற விரும்பவில்லை என்றார்.

மூலக்கதை