கலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள்

தினகரன்  தினகரன்
கலிபோர்னியாவில் புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ள ஆப்பிள் நிறுவனம்: உற்சாகத்தில் மக்கள்

கலிபோர்னியா: ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் புதிய படைப்புக்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம், இந்த ஆண்டும் அசத்தலான புதிய ஐபோன் மாடல்களை வெளியிடவுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் நடைபெறும் ஆப்பிளின் வருடாந்திர விழாவில் புதிய மாடல் மொபைல்கள், வாட்ச், ஐபாட் ப்ரோஸ் மற்றும் மாக் மினி கம்ப்யூட்டர்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இன்று இரவு 10.30 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த விழாவை  ஆப்பிள் நிறுவனம் ட்விட்டரில் நேரலை செய்யவுள்ளது. அதேபோல் இந்நிகழ்ச்சியை ஐபோன், ஐபாட் மற்றும் மாக் கம்ப்யூட்டர் ஆகியவற்றிலும் விண்டோஸ்10 கம்ப்யூட்டர்களில் ஹெச் பிரௌசர் மூலமும் நேரலையில் காண வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் எக்ஸின் மேம்படுத்தப்பட்ட மாடலான ஐபோன் எக்ஸ்எஸ், எக்ஸ்எஸ் பிளஸ், ஐபோன் எக்ஸ்ஆர் ஆகிய புதிய மாடல் மொபைல்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடவுள்ளது. இம்முறை டூயல் சிம் வசதியுடன் ஐபோன்கள் வெளிவரவிருப்பதால், மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

மூலக்கதை