எஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றன

தினமலர்  தினமலர்
எஸ்.இ.இசட்., நிறுவனங்கள் கூடுதல் அவகாசம் கோருகின்றன

புதுடில்லி:மத்­திய அர­சி­டம், எஸ்.இ.இசட்., எனப்­படும் சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லங்­களை அமைக்க, 13 நிறு­வ­னங்­கள் அவ­கா­சம் கோரி­யுள்­ளன.‘ஜி.பி., ரியல்­டர்ஸ்’ நிறு­வ­னம், குரு­கி­ரா­மில், தக­வல் தொழில்­நுட்­பம் மற்­றும் மின்­னணு வன்­பொ­ருள் சாதன துறைக்­கான, சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லம் அமைப்­ப­தற்­கான, ‘கெடு’வை, 2019, நவ., 13 வரை நீட்­டிக்­கு­மாறு விண்­ணப்­பித்­துள்­ளது.
‘ஜே.பி.எப்., பெட்­ரோ­கெ­மிக்­கல்ஸ்’ நிறு­வ­னம், மங்­க­ளூ­ரில், சிறப்பு பொரு­ளா­தார மண்­ட­லம் அமைக்­கிறது. இதற்­கான அவ­கா­சம், 15ம் தேதி­யு­டன் முடி­வ­டை­வ­தால், இந்­நி­று­வ­னம் கூடு­தல் அவ­கா­சம் கோரி­யுள்­ளது.‘அர­விந்தோ பார்மா’ நிறு­வ­னம், நெல்­லுா­ரில், எஸ்.இ.இசட்., அமைக்க, 2019, ஜூலை வரை அவ­கா­சம் கேட்­டுள்­ளது.
‘கோல்­டன் டவர் இன்ப்­ரா­டெக், குமார் பில்­டர்ஸ் டவுன்­ஷிப் வென்­சர்ஸ், க்யூ3 இன்­போ­டெக், டெம்­பிள் பேக்­கே­ஜிங், பென்சோ கெம் இண்­டஸ்ட்­ரீஸ், ஹெலி­யாஸ் போட்டோ வோல்­டெக்’ ஆகிய நிறு­வ­னங்­களும் கூடு­தல் காலம் அளிக்­கக் கோரி­யுள்­ளன.இக்­கோ­ரிக்­கை­கள் குறித்து, டில்­லி­யில் நாளை நடை­பெ­றும், மத்­திய வர்த்­தக துறை செய­லர் தலை­மை­யி­லான கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­படும் என, மத்­திய அரசு அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார்.

மூலக்கதை