சரக்கு விமான சேவையில் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம்

தினமலர்  தினமலர்
சரக்கு விமான சேவையில் ‘ஸ்பைஸ் ஜெட்’ நிறுவனம்

புதுடில்லி:‘ஸ்பைஸ் ஜெட்’ விமான நிறு­வ­னம், 18ம் தேதி முதல், தனி­யாக சரக்கு விமான சேவையை துவக்க இருப்­ப­தாக தெரி­வித்­துள்­ளது.ஸ்பைஸ் ஜெட் விமான நிறு­வ­னம், இந்த சரக்கு போக்­கு­வ­ரத்து சேவைக்கு, ’ஸ்பைஸ் எக்ஸ்­பி­ரஸ்’ என, பெய­ரிட்­டுள்­ளது.
உள்­நாட்­டில் மட்­டு­மின்றி வெளி­நா­டு­க­ளுக்­கும் இந்த சேவையை வழங்­கு­வது குறித்து, இந்­நி­று­வ­னம் திட்­ட­மிட்­டு உள்­ளது.உள்­நாட்டு விமான சேவை­யில் ஈடு­பட்டு வரும் ஒரு நிறு­வ­னம், சரக்கு போக்­குவ­ரத்­துக்கு என தனி­யாக ஒரு சேவையை வழங்­கு­வது, இந்­தி­யா­வில்இதுவே முதல் முறை­யா­கும்.
இந்­நி­று­வ­னம் சரக்கு சேவைக்­காக முத­லில், ‘போயிங் 737- – 700’ விமா­னத்தை பயன்­ப­டுத்த உள்­ளது. 20 டன் எடை சரக்கை, இந்த விமா­னம் கையா­ளும்.வரும், 18ம் தேதி­யன்று ஆரம்­பிக்­கப்­பட உள்ள இந்த சேவை, முதற்­கட்­ட­மாக டில்லி – பெங்­க­ளூரு இடையே வழங்­கப்­பட இருக்­கிறது. விரை­வில், கவு­காத்தி, ஹாங்­காங், காபுல், அம்­ரிஸ்­டர் உள்­ளிட்ட நக­ரங்­க­ளுக்­கும் விரி­வு­ப­டுத்­தப்­பட உள்­ளது.தற்­ச­ம­யம் ஸ்பைஸ் ஜெட் விமா­னங்­கள், நாள் ஒன்­றுக்கு, 500 டன் சரக்­கு­களை கையாள்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை