டபுள் டிரேப் பிரிவில் தங்கம் சுட்டார் அங்குர் மிட்டல்

தினகரன்  தினகரன்
டபுள் டிரேப் பிரிவில் தங்கம் சுட்டார் அங்குர் மிட்டல்

சாங்வோன்: தென் கொரியாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிசுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் அங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆண்கள் டபுள் டிரேப் இறுதிச் சுற்றில் அங்குர் மிட்டர், சீன வீரர் யியாங் யாங், ஸ்லோவகியாவின் ஹூபர்ட் ஆந்த்ரே ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது. வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆப் கடைப்பிடிக்கப்பட்டதில் 4-3 என்ற கணக்கில் யியாங் யாங்கை வீழ்த்தி அங்குர் மிட்டல் (26 வயது) தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். யியாங் யாங் வெள்ளிப் பதக்கமும், 3வது இடம் பிடித்த ஹூபர்ட்  வெண்கலப் பதக்கமும் பெற்றனர். நடப்பு தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இதுவரை 7 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று 2வது இடத்தில் உள்ளது. கொரியா முதலிடத்திலும், சீனா 3வது இடத்திலும் உள்ளன.

மூலக்கதை