10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

தினமலர்  தினமலர்
10 கோடி பேரின் தகவல்களை திருடிய ரஷ்ய ஹேக்கர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தல்

வாஷிங்டன் :10 கோடி பேரின் தகவல்களை திருடிய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள ரஷ்ய ஹேக்கர் நாடு கடத்தப்பட உள்ளார்.
கடந்த 2015-ம்ஆண்டு அமெரிக்காவின் மான் ஹாட்டன் நகரில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 10 கோடி வாடிக்கையளர்களின் தகவல்கள் திருடப்பட்டன. தகவல்களை திருடியது ரஷியாவை சேர்ந்த ஆன்ரேய் டியூரின்35 எனற ஹேக்கர் என தெரியவந்தது. அடுத்தவர்களின் தகவல்களை பயன்படுத்தி அவர்களின் கணக்குகளில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்துதல் போன்ற குற்றங்களிலும் ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்கா அளித்த தகவல்களின் அடிப்படையில் ஆன்ரேய் டியூரினை கைது செய்த ஜார்ஜியா அரசு, அவரை நேற்று அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் விதமாக நாடு கடத்தியது.
அமெரிக்காவில் டியூரின் மீது பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபனமானால் 30 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி என எதிர்பார்க்கப்படுகிறது.

மூலக்கதை