விஜய்யின் 64வது படத்தில் இணையும் அர்ஜூன்

தினமலர்  தினமலர்
விஜய்யின் 64வது படத்தில் இணையும் அர்ஜூன்

மணிரத்னத்தின் கடல் படத்தில் வில்லனாக நடித்த அர்ஜூன், அதன்பிறகு இரும்புத்திரை, கொலைகாரன் படங்களிலும் நடித்தார். அப்படி அவர் வில்லனாக நடித்த படங்கள் வெற்றி பெற்றதால் தொடர்ந்து வில்லன் வேடங்களில் நடிக்க அர்ஜூனை அணுகி வருகிறார்கள் இயக்குனர்கள்.

இப்படியான நிலையில், தற்போது அட்லி இயக்கும் பிகில் படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தனது 64-வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ராசிகண்ணா, ராஷ்மிகா மந்தனா நாயகிகளாக நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் அர்ஜூன் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி விரை வில் உறுதிப்படுத்தப்படும் என்று தெரிகிறது. மேலும், அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.

மூலக்கதை