அத்திவரதரை தரிசனம் செய்த விஜயகாந்த்

தினமலர்  தினமலர்
அத்திவரதரை தரிசனம் செய்த விஜயகாந்த்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காட்சி கொடுக்கும் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசனம் செய்ய மக்கள் கூட்டம் அலைமோதிக்கொண்டிருக்கிறது. நாளை ஜனாதிபதியும் தரிசனம் செய்ய வரவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தும், இன்று காலை தனது குடும்பத்தாருடன் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்துள்ளார்.

மேலும், இன்றைய தினம் விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் மித்ரன் படத்தின் படப்பிடிப்பும் காஞ்சிபுரத்தில் தொடங்குகிறது. அதனால் அப்போது நடக்கும் பூஜையிலும் கலந்து கொள்கிறார் விஜயகாந்த். சிறுத்தை சிவாவிடத்தில் உதவியாளராக பணியாற்றிய பூபாளன் என்பவர் இயக்கும் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ள மித்ரன் என்ற டைட்டீலை நேற்று மாலை 6 மணிக்கு தனது டுவிட்டரில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

மூலக்கதை