சூர்யாவை வில்லனாக மாற்றிய கே.வி.ஆனந்த்?

தினமலர்  தினமலர்
சூர்யாவை வில்லனாக மாற்றிய கே.வி.ஆனந்த்?

அயன், மாற்றான் படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள படம் காப்பான். இந்த படத்தில் சூர்யாவுடன் மோகன்லால், ஆர்யா, சாயிஷா உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்த காப்பான் படத்தின் மையக்கதை குறித்து கே.வி.ஆனந்த் அளித்துள்ள ஒரு பேட்டியில், கெட்ட விசயங்களை செய்பவன் கெட்டவனும் இல்லை. எறும்புக்குகூட தீங்கு இளைக்காதவன் நல்லவனும் இல்லை என்று கூறியுள்ளார்.

அந்தவகையில், இந்த காப்பான் படத்தில் சூர்யா,மோகன்லால், சாயிஷாவின் கேரக்டர்களில் இரட்டை முகம் இருக்கும். முக்கியமாக சூர்யாவின் கேரக்டரில் வில்லத்தனமும் கலந்திருக்கும் என்று கூறும் கே.வி.ஆனந்த், தனக்கான கேரக்டரில் ஒரு நியாயம் இருந்தால் அதில் வில்லத்தனம் கலந்திருந்தாலும் ஆட்சேபிக்காமல் நடிப்பார் சூர்யா என்றும் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை