சண்முகப்பாண்டியனின் புதிய பட டைட்டீல் மித்ரன்

தினமலர்  தினமலர்
சண்முகப்பாண்டியனின் புதிய பட டைட்டீல் மித்ரன்

சகாப்தம், மதுரை வீரன் படங்களில் நடித்த விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியன் தற்போது சிறுத்தை சிவாவுடன் வீரம், வேதாளம், விவேகம் படங்களில் உதவியாளராக பணியாற்றிய பூபாளன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். போலீஸ் கதையில் உருவாகும் இந்தபடத்தில் சண்முகப்பாண்டியனுக்கு ஜோடியாக ரோனிகா சிங் ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த படத்தின் டைட்டீலை டைரக்டர் ஏ.ஆர்.முருக தாஸ் தனது டுவிட்டரில் வெளியிடுவார் என்று ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதேபோல் நேற்று மாலை 6 மணிக்கு, சண்முகப்பாண்டியனின் மூன்றாவது படத்தின் டைட்டில் மித்ரன் என்று அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதமே இப்படத்தின் பூஜை காஞ்சிபுரத்தில் நடைபெற்றநிலையில், இன்று முதல் அதே காஞ்சிபுரத்தில் மித்ரன் படப்பிடிப்பு தொடங்குகிறது.

மூலக்கதை