நானியை ஏமாற்றிய ராஜமவுலி

தினமலர்  தினமலர்
நானியை ஏமாற்றிய ராஜமவுலி

ராஜமவுலி இயக்கிய நான்ஈ படத்தில் நாயகனாக நடித்தவர் நானி. சமந்தா நாயகியாக நடித்திருந்த அந்த படத்தில் சுதீப் வில்லனாக நடித்தார். அந்த படத்தில் வில்லனால் கொல்லப்படும் நானி அதன்பிறகு ஈ உருவத்தில் வந்து சமந்தாவை காதலிப்பார்.

அப்படத்தின் கதையை கேட்டபோது, தனது கேரக்டர் கொல்லப்பட்டபிறகு அந்த ஈக்கும் நம்மைதான் ராஜமவுலி டப்பிங் பேச வைப்பார். அப்போது வித்தியாசமாக டப்பிங் பேசி அசத்திவிட வேண்டும் என்று நினைத்திருந்தாராம் நானி. ஆனால் ராஜமவுலியோ, அந்த ஈக்கு வசனமே கிடையாது என்று சொல்லி நானியை ஏமாற்றி விட்டாராம்.

இந்தநிலையில், தற்போது த லயன் கிங் படத்தில் சிம்பா கதாபாத்திரத்திற்கு தமிழில் சித்தார்த் டப்பிங் பேசியுள்ள நிலையில் தெலுங்கில் நானி பேசியிருக்கிறார். அதையடுத்து அவர் இந்த படத்தின் பிரமோசனில் கலந்து கொண்ட நானி, நான் ஈ படத்தில் என்னை டப்பிங் பேச வேண்டாம் என்று ராஜமவுலி சொன்னபோது ஏமாற்றமாக இருந்தது. ஆனால் அப்படி எனக்குள் இருந்து வந்த ஏமாற்றம் இந்த படத்தில் சிம்பாவிற்கு பேசியதன் மூலம் தீர்ந்து விட்டது என்று தெரிவித்துள்ளார்.

மூலக்கதை