விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த இன்னொரு கால்பந்து வீரர்

தினமலர்  தினமலர்
விஜய்யின் பிகில் படத்தில் இணைந்த இன்னொரு கால்பந்து வீரர்

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பிகில் படத்தில் அவருடன் நயன்தாரா, இந்துஜா, கதிர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். கால்பந்தாட்ட கதையில் உருவாகும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ஹாலிவுட் படங்களில் விளையாட்டு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றியுள்ள எமி மெக்டனெல் என்பவர் இணைந்து பணியாற்றி வருகிறார். அவரைத் தொடர்ந்து தற்போது கேரளாவைச்சேர்ந்த ஐ.எம்.விஜயன் என்பவரும் இப்போது பிகில் படத்தில் ஒரு கேரக்டரில் நடிக்க இணைந்திருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் திமிரு, கொம்பன் படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை