ஆர்.கே.சுரேஷ் இயக்கும் அடல்ட் கண்டன்ட் படம்

தினமலர்  தினமலர்
ஆர்.கே.சுரேஷ் இயக்கும் அடல்ட் கண்டன்ட் படம்

திரைப்பட விநியோகஸ்தராக சில படங்களை வெளியிட்ட ஆர்.கே.சுரேஷ் அதன்பிறகு சில படங்களைத் தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளரானார். தொடர்ந்து பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தின் மூலம் வில்லன் நடிகராகவும் அறிமுகமான ஆர்.கே.சுரேஷ் அந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த 'மருது' படத்திலும் முக்கியமான ஒரு கேரக்டரில் நடித்தார்.

இந்த இரண்டு படங்களில் நடித்த அனுபவத்தை வைத்து பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவானார் ஆர்.கே.சுரேஷ். இப்போது சில மலையாள படங்களிலும் நடித்து வரும் ஆர்.கே.சுரேஷ் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க 'காலண்டர்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் ஆர்.கே.சுரேஷ். இந்த படம் 'துள்ளுவதோ இளமை' மாதிரி அடல்ட் கண்டன்ட் படமாக இருக்கும் என்று தகவல் அடிபடுகிறது. இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

மூலக்கதை