ஆறுதலாக மீண்டும் ஒரு அங்கீகாரம்

தினமலர்  தினமலர்
ஆறுதலாக மீண்டும் ஒரு அங்கீகாரம்

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ,இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியான படம் 'கண்ணே கலைமானே'. தமன்னா கதாநாயகியாக நடித்த இந்தப்படம் இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை உரம் ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் முதன் முதலாக கிராமத்து இளைஞனாக அதாவது இயற்கை விவசாயம் செய்யும் விவசாயியாக நடித்திருந்தார். வங்கி அதிகாரியாக நடித்திருந்தார் தமன்னா.

சுமார் 8 கோடி செலவில் தயாரிக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இந்தப்படம் வணிக ரீதியில் வெற்றியடையவில்லை. இந்நிலையில் 'கண்ணே கலைமானே' படத்துக்கு ஆறுதலாக ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட 'கண்ணே கலைமானே' படத்துக்கு விருது கிடைத்திருக்கிறது.

இதற்கு முன் 'தாதா சாகேப் சர்வதேச மும்பை திரைப்பட திரைப்படவிழாவிலும் கண்ணே கலைமானே திரைப்படம் விருது பெற்றது. இது குறித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. ஆனால் உதயநிதி ஸ்டாலின் இதை கண்டுகொள்ளவே இல்லை.

மூலக்கதை