மோகன்லாலின் பிக் பிரதர் படப்பிடிப்பு துவங்கியது

தினமலர்  தினமலர்
மோகன்லாலின் பிக் பிரதர் படப்பிடிப்பு துவங்கியது

மலையாள திரையுலகில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் தன்னை ஒரு கமர்சியல் இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்டவர் இயக்குனர் சித்திக். கடந்த வருடம் அரவிந்த் சாமி நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்கிற படத்தை இயக்கிய சித்திக், அதன்பிறகு தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் பிரதர் என்கிற படத்தை இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கேரளாவில் துவங்கியுள்ளது. எங்கள் அண்ணா போல அண்ணன்-தம்பி கதையில் கமர்ஷியல் படமாக இது உருவாக இருக்கிறதாம்.

கடந்த சில நாட்களாக சீனாவில் 'இட்டிமானி made in china' என்கிற படத்தின் படப்பிடிப்பில் நடித்து வந்த மோகன்லால், அதை முடித்துவிட்டு இன்று முதல் பிக் பிரதர் ஆக மாறுகிறார்.. இந்தபபடத்தில் கதாநாயகிகளாக ரெஜினா மற்றும் பிச்சைக்காரன் சாத்னா டைட்டஸ் ஆகியோர் நடிக்கின்றனர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கான் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

மம்முட்டியை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சித்திக், இத்தனை வருடங்களில் மோகன்லாலை வைத்து வியட்நாம் காலனி மற்றும் லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் என இரண்டே இரண்டு படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். அந்த வகையில் ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லாலுடன் அவர் கைகோர்த்திருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை