மகேஷ்பாபு படத்தை இயக்க தயாராகும் அர்ஜுன் ரெட்டி டைரக்டர்

தினமலர்  தினமலர்
மகேஷ்பாபு படத்தை இயக்க தயாராகும் அர்ஜுன் ரெட்டி டைரக்டர்

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜூன் ரெட்டி படம் பாலிவுட்டிலும் 'கபீர் சிங்' என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஷாஹித் கபூர் நடித்திருந்த இந்தப் படத்தை அர்ஜுன் ரெட்டியை இயக்கிய சந்திப் ரெட்டியே இயக்கியிருந்தார். தெலுங்கை விட இந்தியில் மிகப்பெரிய அளவில் வசூலை வாரி குவித்து வரும் இந்த படம் பாலிவுட் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு சவால் விட்டுள்ளது.

இந்த இரண்டு படான்குளின் தொடர் வெற்றிகளை தொடர்ந்து முன்னணி இயக்குனர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார் சந்தீப் வங்கா ரெட்டி. அடுத்ததாக இவர் யாருடைய படத்தை இயக்கப் போகிறார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முன்னணி ஹீரோ மகேஷ்பாபுவின் படத்தை இவர் இயக்குவார் என்றே தெரிகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக, தான் மகேஷ்பாபுவிடம் ஒரு கதைக்கான ஒன்லைன் மட்டும் கூறியிருப்பதாகவும் அது மகேஷ்பாபுவிற்கு பிடித்து போனதாகவும் கூறியுள்ளார் சந்தீப் வங்கா ரெட்டி. தற்போது முழுக்கதையையும் எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், அதை முடித்த பின்னரே மகேஷ்பாபு இந்த படத்தில் நடிக்கிறாரா என்பதை உறுதி செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார் சந்தீப்.

மூலக்கதை