வேலூர் மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது... ஏ.சி.சண்முகம் மனுத்தாக்கல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
வேலூர் மக்களவை தொகுதிக்கு வேட்புமனு தாக்கல் தொடங்கியது... ஏ.சி.சண்முகம் மனுத்தாக்கல்

வேலூர்: நாடாளுமன்ற தேர்தலின்போது வேலூர் மக்களவை தொகுதியில் அதிகளவு பணம் சிக்கியது. இதையடுத்து இத்தொகுதிக்கான தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது.

இதையடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் வரும் ஆகஸ்ட் 5ம்தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில் வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியது.

மனுத்தாக்கல் செய்ய வரும் 18ம்தேதி கடைசி நாளாகும். 19ம்தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

22ம்தேதி வரை மனுக்கள் வாபஸ் பெறலாம். இதையடுத்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.

முதல் நாளான இன்று அதிமுக கட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சியின் நிறுவன தலைவர் ஏ. சி. சண்முகம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரிடம் மனு தாக்கல் செய்தார்.

அப்போது அமைச்சர்கள் கே. சி. வீரமணி, தங்கமணி, சேவூர் ராமச்சந்திரன், நிலோபர் கபீல் ஆகியோர் உடனிருந்தனர். திமுக சார்பில் போட்டியிடும் கதிர்ஆனந்த் நாளை மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மனுத்தாக்கல் செய்ய நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

.

மூலக்கதை