யு17 உலக கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது

தினகரன்  தினகரன்
யு17 உலக கோப்பை கால்பந்து அட்டவணை வெளியானது

ஜூரிச்: பிரசேிலில் நடைபெற உள்ள 17வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் கால அட்டவணை நேற்று சுவிட்சர்லந்தில் வெளியிடப்பட்டது. பிரேசிலில்  17வயதுக்கு(யு17) உட்பட்டவர்களுக்கான  6வது  உலக கோப்பை கால்பந்து போட்டியை பிபா நடத்த உள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்க 24 நாடுகள் தகுதிப் பெற்றுளளன.  உலக கோப்பை போட்டி அக்.26ம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் போட்டிக்கான அடையாள சின்னத்தை  பிபா நேற்று முன்தினம் வெளியிட்டது. தொடர்ந்து  சுவிட்சர்லாந்தில் உள்ள ஜூரிச் நகரில் உள்ள பிபா தலைமை அலுவலகத்தில் யு17 உலக கோப்பைக்கான போட்டி அட்டவணையை நேற்று பிபா வெளியிட்டது.அதன்படி பிரேசிலில் உள்ள விட்டோரியா உட்பட 3 நகரங்களில் உள்ள 4 விளையாட்டு அரங்கங்களில் போட்டிகள் நடைபெறும்.  போட்டியில் பங்கேற்கும் 24 அணிகளும் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் போட்டிகள் அக்.26 முதல் நவ.3 வரையிலும், ரவுண்டு 16  போட்டிகள் நவ.5 முதல் நவ.7 வரையிலும் நடக்கும். தொடர்ந்து காலிறுதிப் போட்டிகள் நவ.10, 11 தேதிகளிலும்  அரையிறுதிப் போட்டிகள் நவ.14ம் தேதியும் நடைபெறும்.  மேலும் 3,4வது இடங்களுக்கான போட்டி, இறுதிப் போட்டி ஆகியவை நவ.17ம் தேதி நடைபெறும். போட்டியில் கால்பந்து கூட்டமைப்பு வாரியாக பங்கேற்கும் நாடுகள்ஆப்ரிக்கா: அங்கோலா, காம்ரூன், நைஜிரியா, செனகல்ஆசியா: ஆஸ்திரேலியா , ஜப்பான், கொரியா குடியரசு, தஜிகிஸ்தான்.ஐரோப்பா: பிரான்ஸ், ஹங்கேரி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் வட,மத்திய அமெரிக்கா, கரீபியன்: கனடா, ஹெய்டி, மெக்சிகோ, அமெரிக்காஓசினியா:  நியூசிலாந்து, சாலமோன் தீவுகள் தென் அமெரிக்கா:  அர்ஜென்டீனா, பிரேசில், சிலி, ஈகுவடார், பராகுவே.

மூலக்கதை