பாகிஸ்தானில் விபத்து பாதை மாறிய எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதல்: 34 பயணிகள் பலி; 120 பேர் காயம்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் விபத்து பாதை மாறிய எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதல்: 34 பயணிகள் பலி; 120 பேர் காயம்

லாகூர்: பாகிஸ்தானில் பாதை மாறிச் சென்ற பயணிகள் ரயில், நின்றிருந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 34 பேர் உயிரிழந்தனர். 120 பேர் காயமடைந்தனர்.  பாகிஸ்தானின் குவாட்டாவில் இருந்து, ‘அக்பர் எக்ஸ்பிரஸ்’ ரயில் சென்று கொண்டிருந்தது.  பஞ்சாப் மாகாணத்தின் சாதிக்காபாத்தில்  உள்ள வல்ஹார் ரயில் நிலையத்தில் வந்தபோது அங்கு நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதியது.  இந்த விபத்தில் பயணிகள் ரயிலின் இன்ஜின் முழுவதும் சேதம் அடைந்ததோடு, ரயிலின் 3 பெட்டிகள் சேதமடைந்தன. அதில் இருந்த 34 பயணிகள் உயிரிழந்தனர். 120க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.தவறான வழித்தடத்தில் அக்பர் எக்ஸ்பிரஸ் வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே மீட்பு குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பலர் மோசமான நிலையில் இருப்பதால், உயிர் பலி அதிகரிக்ககூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை