எதிர்பார்ப்பில் விக்ரம்!

தினமலர்  தினமலர்
எதிர்பார்ப்பில் விக்ரம்!திகில் கலந்த சந்தோஷ மனநிலையில் உள்ளார், விக்ரம். இவர், பிரமாண்ட வெற்றியை கொடுத்து, பல ஆண்டுகளாகி விட்டன. கந்தசாமி படத்துக்கு பின், இவர் நடித்த படங்கள், பெரிய வெற்றியை
பெறவில்லை. விமர்சனங்கள், ஏமாற்றம், கவலை
என, எல்லாவற்றையும், பொறுமையாக தாங்கி,
இப்போது, கடாரம் கொண்டான் மூலம், மீண்டும் முழு வீச்சில் களத்தில் குதித்துள்ளார்.
இந்த படம், ஹாலிவுட் படங்களுக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால்,
ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு, விக்ரமின் சந்தோஷத்தை, மேலும் அதிகரித்துள்ளது.
'கண்டிப்பாக, இந்த படம் வெற்றி பெறும்' என, அவரது ரசிகர்களும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். படத்தின் தயாரிப்பாளரான, கமலின் மகள்,
அக் ஷராவுக்கு, இந்த படத்தில் முக்கியமான ரோலாம். கடாரம் கொண்டான் படத்திற்கு பின், அக் ஷரா,
தமிழில், 'பிசி'யாகி விடுவார்' என்கின்றன, கோலிவுட்
வட்டாரங்கள்.

மூலக்கதை