விம்பிள்டன் காலிறுதிக்கு முன்பே காணாமல் போன முன்னணி வீராங்கனைகள்

தினகரன்  தினகரன்
விம்பிள்டன் காலிறுதிக்கு முன்பே காணாமல் போன முன்னணி வீராங்கனைகள்

இந்த தொடரின் மகளிர்  ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் பலரும் காலிறுதி, அரையிறுதி போட்டிகளை எட்டாமலே பரிதாபமாக வெளியேறினர். நடப்பு சாம்பியன் ஜெர்மனியின் ஏஞ்ஜலிக் கெர்பர்(5ம் நிலை) 2வது சுற்றிலேயே  அமெரிக்காவின லாரன் டேவிசிடம்  தோற்று  வெளியேறினார்.முதல் நிலை வீராங்கனை ஆஸ்திரேலியாவின்  ஆஷ்லி பார்தி 4வது சுற்றிலும். 2ம் நிலை வீராஙகனை ஜப்பானின் நவோமி ஒசாகா முதல் சுற்றிலும்,  3ம் நிலை வீராங்கனனை  செக் குடியரசின்  கரோலினா பிளிஸ்கோவா 4வது சுற்றிலும், 4ம் நிலை வீராங்கனை நெதர்லாந்தின் கிகி பெர்டன்ஸ் 3வது சுற்றிலும், 6ம் நிலை வீராங்கனை பெட்ரா குவித்தோவா 4வது சுற்றிலும் தோற்று வெளியேறினர்இப்படி தகுதிச்சுற்றுக்கு முன்னேறிய முதல் 10 ரேங்க் வரை உள்ள வீராஙகனைகளில் 3 பேரை தவிர மற்றவர்கள் காலிறுதியை கூட எட்டாமல் பரிதாபமாக வெளியேறினர். தப்பித்தவர்களில் ருமேனியாவின் சிமோனா ஹாலேப் (7ம் நிலை), உக்ரைனின் எலினா ஸ்விடோலினா (8ம் நிலை), அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ (10ம் நிலை) ஆகியோர் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறி உள்ளனர். அதேநேரத்தில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் 3 இடங்களிலும் இருக்கும் டிஜோகோவிக், ரபேல் நாடல், ரோஜர் பெடரர் ஆகியோர்  ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.

மூலக்கதை