தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்துக்கு கிடைத்தது முதலிடம்

தினமலர்  தினமலர்
தொழிற்சாலைகள் எண்ணிக்கை தமிழகத்துக்கு கிடைத்தது முதலிடம்

சென்னை:தொழிற்­சா­லை­கள் மற்­றும் அவற்­றில் பணி­பு­ரி­ப­வர்­கள் எண்­ணிக்­கை­யில், இந்­தி­யா­வில் முத­லி­டத்தை தமி­ழ­கம் பிடித்­துள்­ளது.



இந்­திய அள­வில், 37 ஆயி­ரத்து, 220 தொழிற்­சா­லை­கள்; 24 லட்­சம் பணி­யா­ளர்­கள் என, தமி­ழ­கம் முத­லி­டத்­தில் உள்­ள­தாக, தமி­ழக அர­சின் கொள்கை விளக்­கக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.தமி­ழக அர­சின் தொழில் துறை மானி­யக் கோரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெருந்­தொ­ழில் துறை தொடர்­பான கொள்கை விளக்­கக் குறிப்­பில் இடம்­பெற்­றுள்ள தக­வல்­கள்:




இந்­தி­யா­வில், தொழிற்­சா­லை­கள் அதி­கம் உள்ள மாநி­ல­மாக, தமி­ழ­கம் உள்­ளது. தொழிற்­சா­லை­களில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­கள் எண்­ணிக்­கை­யி­லும், தமி­ழ­கம் முத­லி­டம் பெற்­றுள்­ளது. மொத்­தம், 37 ஆயி­ரத்து, 220 தொழிற்­சா­லை­கள் உள்ளன. அவற்­றில், 24 லட்­சத்து, 8,282 பேர், பல்­வேறு பணி­களில் ஈடு­பட்­டுள்­ள­னர்.




மஹா­ராஷ்­டிரா மற்­றும் குஜ­ராத் மாநி­லங்­கள், முறையே இரண்­டாம் மற்­றும் மூன்­றாம் இடத்­தில் உள்ளன. தொழிற்­சா­லை­களில் செய்­யப்­பட்ட மூல­தன முத­லீட்­டில், 4.02 லட்­சம் கோடி ரூபா­யு­டன், மூன்­றாம் இடத்­தில் தமி­ழ­கம் உள்­ளது.குஜ­ராத், 8.14 லட்­சம் கோடி ரூபா­யு­டன், முதல் இடத்­தி­லும்; மஹா­ராஷ்­டிரா, 5.02 லட்­சம் கோடி ரூபா­யு­டன், இரண்­டாம் இடத்­தி­லும் உள்ளன.



மொத்த உற்­பத்­தி­யில், 7.65 லட்­சம் கோடி ரூபா­யு­டன், தமி­ழ­கம் மூன்­றாம் இடத்­தி­லும்; குஜ­ராத், 12.22 லட்­சம் கோடி ரூபா­யு­டன், முதல் இடத்­தி­லும்; 10.74 லட்­சம் கோடி ரூபா­யு­டன், மஹா­ராஷ்­டிரா இரண்­டாம் இடத்­தி­லும் உள்ளன.இவ்­வாறு அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை