உலகக்கோப்பை கிர்க்கெட் 2வது அரையிறுதிப் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிர்க்கெட் 2வது அரையிறுதிப் போட்டி: இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா அணி

பர்மிங்ஹாம்: ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்றைய 2வது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச்  பேட்டிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய, ஆஸ்திரேலியா அணி தொடக்க வீரர்கள் ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வார்னர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் 1 பந்து கண்டு ரன்கள்  எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி அதிரடி வீரர் டேவிட் வார்னருடன் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் அதிரடி காட்டினார். ஆனால், டேவிட் வார்னர் 11 பந்துகளில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்டீவ் ஸ்மித்துடன் அதிரடி காட்ட  பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்கினார். ஆனால் பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 12 பந்துகளில் 4 ரன்கள் எடுத்த  நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி, 70 பந்துகளில் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஸ்டீவ்  ஸ்மித்துடன் அதிரடி காட்டிய கிளென் மாக்ஸ்வெல், 23 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பாட் கம்மின்ஸ் 10 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அரைசதம் அடித்து அதிரடி  காட்டிய ஸ்டீவ் ஸ்மித் 47.1 ஓவர்கள் வரை விளையாடி 119 பந்துகளில் 85 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து மிட்செல் ஸ்டார்க் 36 பந்துகளில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜேசன் பெஹ்ரெண்டோர்ஃப் 4  பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நாதன் லியோன் 6 பந்துகளில் 5 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை. ஆனால், ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி சார்பில், அடெல் ரஷீத் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்களை எடுத்தனர். ஜோஃப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்களும், மார்க் வூட் 1 விக்கெட்டையும் எடுத்தனர். இதனையடுத்து 224 ரன்கள் எடுத்ததால் உலகக்கோப்ப்பை  உறுதிப் போட்டியில் விளையாடலாம் என்ற நம்பிக்கையுடன் இங்கிலாந்து அணி களமிறங்கவுள்ளது. உலக கோப்பையில் இதுவரை 7 அரையிறுதிப் போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்த 7 போட்டிகளிலுமே வெற்றி  பெற்றுள்ளது. 7 இறுதிப்போட்டிகளில் ஆடி, அவற்றில் 5 முறை ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது. கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு இதுவரை உலக கோப்பை கை கூடியதில்லை என்பதுதான சோகம். 27 ஆண்டுகளுக்கு பிறகு,  இந்த உலக கோப்பையில்தான் இங்கிலாந்து அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கடைசியாக 1992ம் ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில் நடந்த உலக கோப்பையின் போது, இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த  தொடரில் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை