இங்கிலாந்து அணிக்கு 224 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
இங்கிலாந்து அணிக்கு 224 ரன்கள் இலக்கு

பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் ஸ்டீவ் ஸ்மித் கைகொடுக்க ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் எடுத்தது.


இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்திய அணியை வீழ்த்திய நியூசிலாந்து முதல் அணியாக பைனலுக்கு முன்னேறிவிட்டது. பர்மிங்காமில் நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.


ஸ்மித் அரை சதம் :


ஆஸ்திரேலிய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆர்ச்சர் 'வேகத்தில்' கேப்டன் பின்ச் டக் அவுட்டானார். வார்னர் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹேண்ட்ஸ்கோம்ப் (4) ஒற்றை இலக்கில் திரும்பினார். பின், இணைந்த ஸ்டீவ் ஸ்மித், கேரி ஜோடி பொறுப்புடன் விளையாட, அணி சரிவிலிருந்து மீண்டது. ரஷித் 'சுழலில்' கேரி (46), ஸ்டாய்னிஸ் (0) சிக்கினர்.

ஸ்மித் அரை சதம் கடந்தார். மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தார். போராடிய ஸ்மித் (85) ரன் அவுட்டானார். ஸ்டார்க் 29 ரன்களில் திரும்பினார். ஆஸ்திரேலிய அணி 49 ஓவரில் 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக வோக்ஸ், ரஷித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

மூலக்கதை