உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை அரையிறுதி: இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலிய அணி

பிர்மிங்கம்: உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணிக்கு 224 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 85, கேரி 46, மேக்ஸ்வெல் 22, ஸ்டார்க் 29 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் ரஷித் 3, வோக்ஸ் 3, ஆர்ச்சர் 2  மற்றும் உட் 1 விக்கெட் எடுத்தனர். 224 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு இங்கிலாந்து அணி களமிறங்க உள்ளது.

மூலக்கதை