தனுஷ் பட பாணியில் அடல்ட் படம்; RK சுரேஷ் இயக்கும் ‘காலண்டர்’

FILMI STREET  FILMI STREET
தனுஷ் பட பாணியில் அடல்ட் படம்; RK சுரேஷ் இயக்கும் ‘காலண்டர்’

விநியோகஸ்தர், தயாரிப்பாளர், வில்லன், என பன்முக திறமை கொண்டவர் ஆர்.கே.சுரேஷ்.

அண்மையில் வெளியான பில்லா பாண்டி படத்தின் மூலம் ஹீரோவானார்.

மேலும் சில மலையாள படங்களில் முக்கிய கேரக்டரிலும் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் விரைவில் இயக்குனராக இருக்கிறார்.

முற்றிலும் புதுமுகங்கள் நடிக்க ‘காலண்டர்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த படம் தனுஷின் ‘துள்ளுவதோ இளமை’ மாதிரி அடல்ட் கண்டன்ட் படமாக இருக்கும் என அவரே சொன்னார்.

இதனை ரீல் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்

மூலக்கதை