கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் 25,000 திமுகவினருக்கு உறுப்பினர் அட்டை

தமிழ் முரசு  தமிழ் முரசு
கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் 25,000 திமுகவினருக்கு உறுப்பினர் அட்டை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி தலைமை செயற்குழு உறுப்பினரும் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளருமான டி. ஜெ. கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் மு. பகலவன், துணை செயலாளர் கதிரவன், மேற்கு ஒன்றிய செயலாளர் மு. மணிபாலன், ஒன்றிய நிர்வாகிகள் வேதாச்சலம், திருமலை, பாஸ்கரன், ராமஜெயம், அறிவழகன் முன்னிலை வகித்தனர்.

கொள்கை பரப்பு துணை செயலாளர் குத்தாலம் க. அன்பழகன் சிறப்புரையாற்றினார்.

கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் உள்ள 29 ஊராட்சி மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளை சேர்ந்த 25 ஆயிரம் திமுகவினருக்கு உறுப்பினர் அட்டையைகுத்தாலம் க. அன்பழகன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி. ஜெ. கோவிந்தராஜன் ஆகியோர் வழங்கினர்.

.

மூலக்கதை