இன்று இங்கிலாந்து-ஆஸ்திரேலியா மோதல் லார்ட்சில் நுழையப் போவது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
இன்று இங்கிலாந்துஆஸ்திரேலியா மோதல் லார்ட்சில் நுழையப் போவது யார்?

பர்மிங்ஹாம்: ஐசிசி உலக கோப்பை தொடரில் இன்று பர்மிங்ஹாமில் நடைபெறும் 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி இப்போட்டி மதியம் 3 மணிக்கு துவங்குகிறது.

இதில் வெற்றி பெறும் அணி, வரும் 14ம் தேதி லார்ட்சில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து மோதும். உலக கோப்பையில் இதுவரை 7 அரையிறுதிப் போட்டிகளில் ஆடியுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, அந்த 7 போட்டிகளிலுமே வெற்றி பெற்றுள்ளது. 7 இறுதிப்போட்டிகளில் ஆடி, அவற்றில் 5 முறை ஆஸ்திரேலியா கோப்பையை வென்றுள்ளது.

கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்துக்கு இதுவரை உலக கோப்பை கை கூடியதில்லை என்பதுதான சோகம். 27 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த உலக கோப்பையில்தான் இங்கிலாந்து அணி, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.கடைசியாக 1992ம் ஆண்டு ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாடுகளில் நடந்த உலக கோப்பையின் போது, இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அந்த தொடரில் அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இங்கிலாந்து, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் சுற்றில் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில்தான் நடந்தது. அதில் ஆஸ்திரேலியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

மீண்டும் அதே மைதானத்தில் அரையிறுதியில் இன்று 2 அணிகளும் மோதுகின்றன.

ஆஸி.

அணியின் டாப்-ஆர்டர் வலுவாக காட்சியளிக்கிறது. கேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மாக்ஸ்வெல் என வரிசையாக மிரட்டுகின்றனர்.

காயம் காரணமாக க்வாஜா, இத்தொடரில் இருந்து விலகி விட்டார் என்பது அந்த அணிக்கு பலவீனம்தான். இங்கிலாந்து அணியின் டாப்-ஆர்டரும் வலுவாகத்தான் உள்ளது.

பேர்ஸ்டோ, ஜோ ரூட், இயான் மார்கன், பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர் என அவர்களும், ஆஸி.

பவுலர்களுக்கு நெருக்கடி தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.   இரு அணிகளின் பவுலர்களையும் ஒரே தராசில் எடை போடலாம் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது என்றே நம்பலாம்.

.

மூலக்கதை