உள்ளாட்சி தேர்தல் வரும்: தமிழிசை நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளாட்சி தேர்தல் வரும்: தமிழிசை நம்பிக்கை

பெரம்பலூர்: பாஜ உறுப்பினர் சேர்க்கை குறித்து மாநில அளவிலான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று பெரம்பலூரில் நடந்தது. இதில் பங்கேற்ற பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றில் நாங்கள் சிறப்பாக பணிபுரிய வேண்டுமென்ற நோக்கத்தோடு உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறோம்.

தமிழகத்தில் மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் தமிழகத்துக்கு பல நல்லத்திட்டங்களை கொண்டு வருவதற்கு தொடர்ந்து பாஜ முயற்சி செய்யும்.

10 சதவீத இடஒதுக்கீடு என்பது பல பேர், தவறாக புரிந்து கொண்டு தவறான கருத்துகளை மக்கள் முன்னிலையில் பரப்பி வருகின்றனர். இது பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின மக்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் எந்தவிதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது. நீட்டை பொறுத்தமட்டில் தமிழகத்தில் ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தல் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை