மத்திய அரசிடம் மாற்று கருத்து கூட சொல்லத் தயங்கும் தமிழக அரசு: கே.எஸ். அழகிரி தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய அரசிடம் மாற்று கருத்து கூட சொல்லத் தயங்கும் தமிழக அரசு: கே.எஸ். அழகிரி தாக்கு

புவனகிரி: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி நேற்று அளித்த பேட்டி: நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு மறுத்த உடன் தமிழக அரசு மற்றொரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்க வேண்டும். தமிழக அரசு இன்னும் அழுத்தம் கொடுத்து செயல்பட்டிருக்க வேண்டும்.

மத்திய அரசுக்கு மாற்றுக் கருத்து சொல்வதற்கு கூட எடப்பாடி அரசு தயங்குகிறது. அதனால் நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் சிவி சண்முகத்தின் கருத்து ஏற்புடையது அல்ல.

மத்திய மோடி அரசு ரூ. 8 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் ஏழைகள் என கூறுகிறது.

அது தவறு. அதை விடவும் குறைவான வருவாய் உள்ளவர்களையே ஏழைகளாக கணக்கெடுக்க வேண்டும்.

அடுத்ததாக தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் எத்தனை பேர் உள்ளனர். அவர்களில் ஏழைகள் எவ்வளவு பேர் உள்ளனர்.

என்பதை கணக்கெடுத்து அவர்களுக்குத்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கர்நாடகாவில் பாஜக குதிரை பேர அரசியல் செய்கிறது. அதற்கு எதிராக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது.

நேர்மை தான் வெல்லும். பணம், ஜாதி, மத அரசியல் ஒருபோதும் வெல்லாது.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை