டோனியை ஆடும் லெவனில் சேர்த்திருப்பீர்களா? வில்லியம்சனிடம் கேள்வி எழுப்பிய நிருபர்

தினகரன்  தினகரன்
டோனியை ஆடும் லெவனில் சேர்த்திருப்பீர்களா? வில்லியம்சனிடம் கேள்வி எழுப்பிய நிருபர்

மான்செஸ்டர்: நியூசிலாந்துக்கு எதிரான உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தில், 18 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் இந்திய ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். 30.3 ஓவரில் 92 ரன்னுக்கு 6வது விக்கெட் வீழ்ந்த நிலையில், ஆட்டம் குளோஸ் என்றே அனைவரும் முடிவுக்கு வந்தனர். ஆனால், 7வது விக்கெட்டுக்கு டோனியும், ஜடேஜாவும் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடுமையாகப் போராடினர். இந்நிலையில் தட்டிவிட்டு 2 ரன் எடுக்க முயன்ற டோனி ரன் அவுட் ஆகி கண்ணிருடன் வெளியேறினார். மேலும் தோனி குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தோனி நினைத்திருந்தால் வெற்றி பெற வைத்திருக்கலாம் என்று அவர் மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்கள் வைத்தனர். ஒரு சிலர் அவருக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் செய்தியாளர்களை சந்தித்த போது அவரிடம் நீங்கள் இன்று இந்திய அணியின் கேப்டனாக இருந்தால், தோனியை ப்ளேயிங் லெவனில் தேர்வு செய்வீர்களா? என்று கேட்டார். தோனியின் அனுபவம் என்பது மிக முக்கியம். அதுவும் இது மாதிரியான கட்டத்தில் அவரின் பங்களிப்பு என்பது முக்கியமான ஒன்று. போட்டி நடந்த இரண்டு நாள்களிலும் அவரது பங்களிப்பு என்பது மிக மிக முக்கியமானதாக இருந்தது. தோனி தனது நாட்டுரிமையை மாற்றப்போகிறாரா? அப்படி மாற்றினால் நாங்கள் எங்களின் அணி தேர்வு குறித்துச் சிந்திக்க வேண்டும் என்று கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.

மூலக்கதை