அமெரிக்காவில் இந்தியர் நாடு கடத்தல்

தினமலர்  தினமலர்
அமெரிக்காவில் இந்தியர் நாடு கடத்தல்

நியூயார்க்: இந்தியாவை சேர்ந்தவர் தல்வார்.இவர், சுற்றுலா பயணியாக சமீபத்தில் அமெரிக்கா சென்றார். அங்கு 2019, அக்டோபர் வரை வசிக்க, அவருக்கு 'விசா' வழங்கப்பட்டது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான ஜெர்மனியில், ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், தல்வார் தேடப்பட்டு வரும் தகவல், குடியுரிமை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, தல்வாரை கைது செய்த போலீசார், அவரை ஜெர்மனிக்கு நாடு கடத்தினர்.

மூலக்கதை