அமெரிக்காவில் வாடகை ஹெலிகாப்டர் சேவை: தொடங்கியது உபர் நிறுவனம்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் வாடகை ஹெலிகாப்டர் சேவை: தொடங்கியது உபர் நிறுவனம்

நியூயார்க்: அமெரிக்காவின் மன்ஹட்டானில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையம் வரையான வாடகை ஹெலிகாப்டர் சேவையை  பிரபல வாடகை கார் நிறுவனமான Uber நிறுவனம் தொடங்கியுள்ளது. மன்ஹட்டான் நகரில் இருந்து ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்துக்கு  இயக்கப்படும் இந்த ஹெலிகாப்டர் 8 நிமிடங்களில் சென்றடையும்.ஒரு முறை பயணத்துக்கு 200 முதல் 250 டாலர் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஸ்டாப்பிலிருந்து அருகிலிருக்கும் இன்னொரு ஸ்டாப்பிற்கு செல்ல இந்திய மதிப்பில் 14 ஆயிரம் ரூபாய் ஆகும். தற்போது காரில் அந்தத் தொலைவைக் கடக்க குறைந்தது ஒரு மணி நேரம் ஆகிறது. சில சமயங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் 2 மணி நேரம் கூட ஆகிறது. ஆனால் ஹெலிகாப்டரில் சில நிமிடங்களில் பறந்துவிடலாம்.  நியூயார்க்கில் வாடகை ஹெலிகாப்டர் சேவை வழங்கும் இரண்டாவது நிறுவனம் உபர். கடந்த மார்ச் மாதம் Blade Urban Air Mobility நிறுவனம் மூன்று விமான நிலையங்களுக்கு இடையிலான வாடகை-ஹெலிகாப்டர் சேவைகளைத் தொடங்கியது.ஆனால் இந்த ஹெலிகாப்டர் சேவையை அனைத்து உபெர் வாடிக்கையாளர்களும் பயன்படுத்த முடியாது. உபெர் கார் சேவை அல்லது உபெர் ஈட்ஸ் ஆப்-ல்  2 ஆயிரத்து 500 டாலர்கள் செலவளித்தவர்களைப் போன்ற பிளாட்டினம் மற்றும் டைமண்ட் புள்ளிகளைப் பெற்ற வாடிக்கையாளர்கள்தான் இந்த சேவையைப் பெற முடியும். அமெரிக்காவின் பிற இடங்களுக்கும் இச்சேவையை விரிவுபடுத்த உபெர் திட்டமிட்டுள்ளது. வாடிக்கையாளர் தங்களது கைப் பை மற்றும் லக்கேஜையும் இதில் எடுத்துச் செல்லலாம்.

மூலக்கதை