துணிச்சலாக போராடிய ஜடேஜா | ஜூலை 10, 2019

தினமலர்  தினமலர்
துணிச்சலாக போராடிய ஜடேஜா | ஜூலை 10, 2019

 மான்செஸ்டர்: உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் துணிச்சலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜடேஜா 77 ரன்கள் விளாசினார். 

இங்கிலாந்தில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நடந்த முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து மோதின. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 239 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ‘டாப்–ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஏமாற்றினர். ரோகித் சர்மா (1), கோஹ்லி (1), லோகேஷ் ராகுல் (1) விரைவில் கிளம்பினர். தினேஷ் கார்த்திக் 6 ரன் எடுக்க, ரிஷாப் பன்ட், பாண்ட்யா தலா 32 ரன் எடுத்தனர். 

92 ரன்னுக்கு 6 விக்கெட் என தடுமாறிய போது, தோனி, ஜடேஜா இணைந்தனர். 

போராடிய ஜடேஜா 77 ரன்னுக்கு அவுட்டானார். 


முதல் வீரர்

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் பேட்டிங் ஆர்டரில் 7 அல்லது அதற்குப் பின் களமிறங்கி அரைசதம் அடித்த முதல் வீரர் ஆனார் இந்தியாவின் ஜடேஜா.

* 8 வது, அதற்கும் கீழான இடத்தில் களமிறங்கி அதிக ரன் எடுத்த சர்வதேச வீரர்களில், ஜிம்பாப்வேயின் ஹீத் ஸ்ட்ரீக்கை (72), முந்தி 2வது இடம் பிடித்தார் ஜடேஜா (77). முதலிடத்தில் கூல்டர் நைல் (92, ஆஸி.,) உள்ளார்.

* உலக கோப்பை அரையிறுதியில் அதிக சிக்சர் அடித்த வீரர்களில் கங்குலிக்கு (5, கென்யா, 2003) அடுத்த இடத்தை நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கலத்துடன் (2015, தெ.ஆப்.,) பகிர்ந்து கொண்டார் ஜடேஜா. இருவரும் தலா 4 சிக்சர் அடித்தனர்.

 

2014க்குப் பின்

கடந்த 2014, செப்., 5ல் இங்கிலாந்துக்கு எதிரான லீட்ஸ் போட்டியில் ஜடேஜா 87 ரன்கள் எடுத்தார். இதன் பின் நேற்று தான் அரைசதம் எட்டினார்.


41

உலக கோப்பை தொடரில் இரண்டு போட்டியில் மட்டும் பங்கேற்ற ஜடேஜா, பீல்டிங்கில் துடிப்பாக செயல்பட்டார். உள்வட்டத்துக்குள் 24, பவுண்டரி பகுதிகளில் 17 என மொத்தம் 41 ரன்களை தடுத்துள்ளார். கப்டில் 9 போட்டியில் 34 ரன்கள் தடுத்தார்.

மூலக்கதை