இமெயில் கசிந்த விவகாரம் அமெரிக்க தூதர் ராஜினாமா

தினகரன்  தினகரன்
இமெயில் கசிந்த விவகாரம் அமெரிக்க தூதர் ராஜினாமா

லண்டன்: அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதராக இருப்பவர் கிம் டாரோச். இவர், டிரம்ப் அமெரிக்க அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் என விமர்சனம் செய்து பிரிட்டன் அரசுக்கு இமெயில் ஒன்றை சமீபத்தில் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்த ரகசியம் கசிந்ததை தொடர்ந்து டாரோச் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை அலுவலகமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக டாரோச் கூறுகையில், `யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன். இந்த இக்கட்டான நிலையில் எனது பதவியை தொடரமுடியாது என்பதால் பதவி விலகுகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மூலக்கதை