நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான்

தினமலர்  தினமலர்
நிதியமைச்சரின் அறிவிப்புக்கு பின்னணி காரணம் இதுதான்

புது­டில்லி:ஓராண்­டில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல், ரொக்­க­மாக வங்­கி­யி­லி­ருந்து எடுத்­தால், 2 சத­வீ­தம், டி.டி.எஸ்., பிடிக்­கப்­படும் என, மத்­திய பட்­ஜெட்­டில், நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் அறி­வித்­தார்.அமைச்­ச­ரின் இந்த முடி­வுக்கு கார­ண­மாக இருந்­தவை குறித்து, தற்­போது தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.ஓராண்­டில், 448 நிறு­வ­னங்­கள், தலா 100 கோடி ரூபாய் க்கு மேல், வங்­கி­யி­லி­ருந்து, ரொக்­க­மாக எடுத்­துள்ளன. இவை எடுத்­துள்ள மொத்த தொகை, 5.56 லட்­சம் கோடி ரூபாய்.
இரண்டு லட்­சம் தனி­ந­பர்­கள் அல்­லது வணிக நிறு­வ­னங்­க­ளால், 2017- – 18ல் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ரொக்­க­மாக எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அப்­படி எடுக்­கப்­பட்ட மொத்த தொகை மதிப்பு, 11.31 லட்­சம் கோடி ரூபாய். 10 முதல் 100 கோடி ரூபாய் வரை­யி­லான தொகையை 7, 300 பேர்­ எடுத்­துள்­ள­னர். எனவே, இவர்களின் ரொக்க பரிவர்த்தனையை குறைத்து, வரி வருவாயை அதிகரிக்கவே நிதியமைச்சர் இந்த முடிவை எடுத்தார்.இவ்­வாறு அரசு தரப்­பி­னர் தெரி­வித்­துள்­ள­னர்.

மூலக்கதை