மண்ணில் செங்குத்தாக நின்ற காயின்: பூவா? தலையா? என்று நடுவரை குழப்பிய ‘டாஸ்’

தமிழ் முரசு  தமிழ் முரசு
மண்ணில் செங்குத்தாக நின்ற காயின்: பூவா? தலையா? என்று நடுவரை குழப்பிய ‘டாஸ்’

கோலாலம்பூர்: மலேசியாவின் கோலாலம்பூரில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் சார்பில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிழக்கு பகுதி 2019 ஃபைனல் போட்டி நடந்தது. இதில், நேபால், ஹாங்காங் அணிகள் மோதின.

இதற்கான காயின் டாஸின் போது, பூவும் விழுகாமல், தலையும் விழுகாமல், காயின் செங்குத்தாக அப்படியே மண்ணில் புதைந்து நின்றது. கிரிக்கெட்டின் காயின் ‘டாஸில்’ இது ஒரு அபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இதனை போட்டியின் நடுவர், அப்படியே நின்ற காயினுடன் சேர்த்து வீரர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.நீண்ட இழுபறிக்கு பின், இரண்டாவது முறையாக டாஸ் போடப்பட்டது. இதில் வெற்றி பெற்ற நேபால் அணி முதலில் ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய ஹாங் காங் அணி, 43. 1 ஓவரில், 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுலபமான இலக்கை துரத்திய நேபால் அணி, 16. 1 ஓவரில் வெறும் 4 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கையில் நடக்கவுள்ள, 19 வயதுக்கு உட்பட்டோருக்கு உட்பட்ட ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க நேபால் அணி தகுதி பெற்றது.

.

மூலக்கதை