அவரு செத்தால்தான் பாக். ஜெயிக்கும்!...மாஜி வீரர் சர்ச்சை டுவிட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
அவரு செத்தால்தான் பாக். ஜெயிக்கும்!...மாஜி வீரர் சர்ச்சை டுவிட்

இஸ்லாமாபாத்: உலக கோப்பை தொடரில் சர்ச்சைகளை சந்தித்த பாகிஸ்தான் அணி, 5 வெற்றிகளையும் நியூசிலாந்துக்கு சமமாக 11 புள்ளிகளையும் பெற்றும் அரையிறுதிக்கு நெட் ரன் ரேட் இல்லாததால் செமி பைனல் வாய்ப்பு பறிபோனது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான படுதோல்வி, ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளிடம் தோல்வி ஆகியவை அணியை பெரிதும் பாதித்தன.

இதுகுறித்து, பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘‘பாகிஸ்தானின் தற்போதைய கோச்சான மிக்கி ஆர்தர் உயிருடன் இருக்கும் வரை பாகிஸ்தானால் கோப்பையை ஜெயிக்க முடியாது.

மிக்கி ஆர்தர் இறந்தால் ஒழிய அவர் பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகமாட்டார்’’ என்று கூறி சர்ச்சையை கிளப்பிட்டுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் பயிற்சியாளராக பொறுப்பேற்றவர் மிக்கி ஆர்தர்.

அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்தவர். அவரது பதவிக்காலம் கடந்த 2017ம் ஆண்டுடன் முடிவடைய இருந்தது.

ஆனால், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு, 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை