ரூ.3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல் ; சர்வதேச கடத்தல்காரர்கள் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரூ.3 கோடி செம்மரக் கட்டைகள் பறிமுதல் ; சர்வதேச கடத்தல்காரர்கள் கைது

திருமலை: செம்மரக்கட்டை கடத்திய சர்வதேச கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 3 கோடி மதிப்பிலான 90 கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், போருமாமில்லா சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தினர்.

போலீசாரை பார்த்ததும் லாரியை நிறுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர்.
போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர். விசாரணையில் சர்வதேச செம்மரக்கட்டை கடத்தல்காரர்களான மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த ரானாதத்தா, கடலூரை சேர்ந்த உலகநாதன், வேலு என்பது தெரிய வந்தது.ரானா தத்தா கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து உலகநாதன், வேலுவுடன் சேர்ந்து லாரி மூலம் கடப்பா மாவட்டம், காசிநாயினி மண்டலம் நல்லமல்லா வனப்பகுதியில் செம்மரங்களை வெட்டி கடத்த முயன்றதும், அவர்கள் இருவரும் சர்வதேச கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்ய கட்டைகளை சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரியவந்தது. தற்போது அவர்களிடம் இருந்து ரூ. 3 கோடி மதிப்புள்ள 3. 3 டன் எடை கொண்ட 90 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இத்தகவலை கூடுதல் எஸ்பி லட்சுமி நாராயண தெரிவித்தார்.

.

மூலக்கதை