மும்பையில் மழை பெய்கிறதா? என கேட்ட சன்னி லியோனுக்கு சரமாரி டோஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மும்பையில் மழை பெய்கிறதா? என கேட்ட சன்னி லியோனுக்கு சரமாரி டோஸ்

மும்பை : மும்பையில் மழையா பெய்கிறது என்று சந்தேகமாக கேட்ட நடிகை சன்னி லியோனுக்கு நெட்டிஸன்கள் சரமாரியாக டோஸ் விட்டுக்கொண்டிருக்கின்றனர். மும்பையில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்துவருகிறது.

சாலை முழுவதும் மழை நீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடுகிறது. போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புகுள்ளாகி யிருக்கிறது.

தாழ்வான பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீர் புகுந்திருக்கிறது. விமான போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.மழைக்கு பலர் பலியாகியிருக்கின்றனர். இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் சன்னி லியோன், ‘மும்பையில் மழையா பெய்கிறது’ என்று கிண்டலாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டிருப்பது பலரையும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சன்னி லியோனுக்கு நெட்டிஸன்கள் சரமாரியாக டோஸ் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.

மழை பெய்யவில்லை என்று கண்டுபிடிப்பு நடத்தியிருக்கும் சன்னி லியோனுக்கு விருதுதான் கொடுக்க வேண்டும் என்றும் நக்கலடித்திருக்கின்றனர்.

.

மூலக்கதை