ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னருக்கு 3வது பெண் குழந்தை

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய அதிரடி வீரர் வார்னருக்கு 3வது பெண் குழந்தை

சிட்னி:  ஆஸ்திரேலியாவின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னர்-கேன்டீஸ் தம்பதிகளுக்கு மூன்றாவதா பெண் குழந்தை பிறந்துள்ளது. ஓராண்டு  தடைக்காலம் முடிந்த பின், தற்போது உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றுள்ள வார்னர், இதுவரை நடந்த 8 போட்டிகளில்  516 ரன்களை குவித்துள்ளார்.


முன்னதாக, பந்தை சேதப்படுத்திய புகாரால் ஏற்பட்ட பிரச்னைகள் காரணமாக அவரது கர்ப்பமான மனைவி கேன்டீஸுக்கு கடந்தாண்டு கருச்சிதைவு  ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அவருக்கு 3வது பெண் குழந்தை நேற்றுமுன்தினம் இரவு பிறந்தது.

அதற்கு இஸ்லா ரோஸ் என பெயரிட்டுள்ளனர்.   ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் வார்னர் தம்பதியினருக்கு உள்ளனர் குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை