10 அணிகளும் தலா 8 போட்டியில் பங்கேற்ற நிலையில் கடைசி லீக் போட்டிகள் தொடங்கின: இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
10 அணிகளும் தலா 8 போட்டியில் பங்கேற்ற நிலையில் கடைசி லீக் போட்டிகள் தொடங்கின: இங்கிலாந்து  நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்

லண்டன்:  உலக கோப்பை போட்டியின் கடைசி லீக் போட்டிகள் இன்று முதல் துவங்குகின்றன. 10 அணிகள் மோதிய லீக் போட்டியில் இதுவரை  நடந்த தலா 8 போட்டிகளில் அனைத்து அணிகளும் மோதிவிட்டன.

புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தையும் அடுத்தடுத்த இடங்களில்  இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ெவஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள்  உள்ளது. இதில், முதல் 4 இடங்களுக்குள் வந்துள்ள 4 அணிகளும் அரையிறுதி போட்டியில் மோதும் நிலையில், ஏற்கனவே ஆஸ்திரேலியாவும்,  இந்தியாவும் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டன.

இந்நிலையில், இன்று மாலை 3 மணிக்கு செஸ்டர் - லி - ஸ்ட்ரீட் மைதானத்தில் நடக்கும் 41வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து  அணிகள் மோதுகின்றன.

போட்டியை நடத்தும் இங்கிலாந்து இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி எடுத்து  புள்ளிபட்டியலில் 4வது இடம் வகிக்கிறது.

இலங்கை, ஆஸ்திரேலியாவிடம் தோற்றதால் சற்று தடுமாற்றத்திற்குள்ளான. இங்கிலாந்து அணி,  இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 337 ரன்கள் குவித்து மீண்டும் எழுச்சி பெற்று விட்டது. 8 ஆட்டங்களில் 5 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவில்லை என்று 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணியும் இன்றைய ஆட்டத்தில் வாகை  சூடினால், அரைஇறுதியை உறுதி செய்யும்.

தோற்றால் மற்ற அணியின் முடிவை பொறுத்து நியூசிலாந்தின் வாய்ப்பு தீர்மானிக்கப்படும். தொடக்கத்தில்  பலத்தை காட்டிய நியூசிலாந்து அணி கடைசி இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.மொத்தத்தில் இரு அணிகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் மோதலாக அமைந்துள்ளதால் இந்த ஆட்டத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியலில், இங்கிலாந்து அணியில், ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), பென்  ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், பிளங்கெட், ஜோப்ரா ஆர்ச்சர், அடில் ரஷித், மார்க்வுட் ஆகியோரும், நியூசிலாந்து அணியில் மார்ட்டின்  கப்தில், ஹென்றி நிகோல்ஸ், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர்,  லோக்கி பெர்குசன், டிரென்ட் பவுல்ட், மேட்ஹென்றி அல்லது டிம் சவுதி ஆகியோரும் விளையாடுகின்றனர்.

.

மூலக்கதை