அரையிறுதியில் நுழைய இந்தியாவை போல் நியூசிலாந்தும்... பாகிஸ்தானின் வாழ்வு இங்கிலாந்தின் கையில்..!முன்னாள் வீரர் வக்கார் யூனிஸின் அபார நம்பிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
அரையிறுதியில் நுழைய இந்தியாவை போல் நியூசிலாந்தும்... பாகிஸ்தானின் வாழ்வு இங்கிலாந்தின் கையில்..!முன்னாள் வீரர் வக்கார் யூனிஸின் அபார நம்பிக்கை

லண்டன்:  உலகக்கோப்பைப் போட்டியில் பாகிஸ்தான் அணி 8 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 9 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. இன்னும்  பாகிஸ்தான் அணிக்கு வங்கதேசத்துடனான (நாளை மறுநாள்) ஆட்டம் மட்டுமே இருக்கிறது.

இந்த ஆட்டத்தில் வென்றாலும் கூட, இன்று நடக்கும்  போட்டியில் இங்கிலாந்து அணியானது நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தால்தான் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குள் செல்ல முடியும். முன்னதாக பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதிபெறுவது கடந்த போட்டியில் இந்திய அணியின் கைகளில் இருந்தது. அப்போது இந்தியா ஜெயிக்க  வேண்டும்.

இங்கிலாந்து தோற்க ேவண்டும் என்று விரும்பினர். அதேபோல இன்றும் இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் தோற்க ேவண்டும் என்று  கூறுகின்றனர்.இன்றைய போட்டியின் முடிவில்தான் பாகிஸ்தான் அணியின் வாழ்வு இருக்கிறது. ஆனால், அரையிறுதிக்குள் ஒருவேளை பாகிஸ்தான்  அணி சென்றுவிட்டால், அனைத்து அணிகளுக்கும் ஆபத்தான அணியாக மாறிவிடும் என முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ஐசிசி இணையதளத்தில் வக்கார் யூனிஸ் எழுதியள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:உலக கோப்பை போட்டியில், அரையிறுதிக்கு பாகிஸ்தான் தகுதிபெறும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது. ஒருவேளை அரையிறுதிக்கு  பாகிஸ்தான் அணி தகுதிபெற்றுவிட்டால், பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது தலைமையிலான அணி மற்ற அணிகளுக்கு மிகப்பெரிய ஆபத்தான  அணியாக மாறிவிடும்.வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெறுவோம். எப்படியாகினும் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பு கைவிட்டுப்போகவில்லை.

உலகக்  கோப்பையில் இருந்து தொடக்கத்திலேயே வெளியேறி இருக்க வேண்டியநிலையில் அதிர்ஷ்டவசமாக தப்பி, இன்னும் அரையிறுதிக்கான போட்டியில்  இருக்கிறோம்.

தற்போது இருக்கும் பாகிஸ்தான் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட அணியை மாற்றாமல் வைத்திருக்க வேண்டும்.   இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை