உலக கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லும்!: கோஹ்லியை நெகிழ வைத்த மூதாட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலக கோப்பை போட்டியில் இந்தியா கோப்பையை வெல்லும்!: கோஹ்லியை நெகிழ வைத்த மூதாட்டி

பர்மிங்காம்: உலக கோப்பை தொடரில் நேற்று இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்த போட்டியில் 87 வயதான மூதாட்டி ஒருவர்  அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

போட்டியின்போது மைதானத்தில் இருந்து கொண்டே அனைவரின் மனதையும் கொள்ளையடித்த அந்த  மூதாட்டியின் ெபயர் சாருலதா படேல். போட்டியின் நடுவே வாயில் சிறுவர்களைப் போல ஒரு விசில் ஊதுகுழலை வைத்துக்கொண்டு இந்திய  அணிக்காக ஆரவாரம் செய்து ரசிகர்களை மகிழ்வைத்தார்.

போட்டியின் நடுவிலேயே இவர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இந்திய கிரிக்கெட்  வீரர்களும் இந்த பாட்டியின் ஆரவாரத்தில் மயங்கினர்.5இந்திய அணி வெற்றிப் பெற்று ஆட்டம் முடிந்தவுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மற்றும் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆகிய  இருவரும் கேலரியில் அமர்ந்திருந்த அந்த மூதாட்டியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்பின்பு பேசிய அந்த மூதாட்டி சாருலதா படேல், ‘‘இந்திய  அணி நிச்சயம் கோப்பையை வெல்லும்.

நான் கடவுளிடம் இந்திய அணிக்காக வேண்டிக் கொள்வேன்’’ என்றார்.


.

மூலக்கதை