இங்கிலாந்துடன் இந்தியா அணி தோல்வி: பாக். முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக தோற்றனர்!...பிரபலங்கள், சமூக வலைதளவாசிகள் ‘நறுக்’ பதிவுகள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
இங்கிலாந்துடன் இந்தியா அணி தோல்வி: பாக். முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக தோற்றனர்!...பிரபலங்கள், சமூக வலைதளவாசிகள் ‘நறுக்’ பதிவுகள்

புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 31 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோனி, கேதர் ஜாதவ், சாஹல் உள்ளிட்டோரின் பேட்டிங் செயல்பாடுகள் ரசிகர்களை மிகுந்த கோபத்துக்கு கொண்டு வந்துள்ளது.

போட்டியின் கடைசி 5 ஓவர்களில், தோனியின் ஆட்டம் பலரையும் கேள்விக் கேட்க தூண்டியுள்ளது. அந்த வகையில், பிரபலங்கள் மற்றும் சமூகவலைதளவாசிகள் ‘நறுக்’ பதிவுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.   பாகிஸ்தான் ரசிகர் யூசுப், ‘இந்திய அணி தோல்வியுற்றதை எளிதில் ஜீரணிக்க இயலவில்லை.

பாகிஸ்தான் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்திய அணி இவ்வாறு விளையாடி உள்ளது’ என பதிவிட்டுள்ளார்.  

போட்டியின் போது 48. 5வது ஓவரில், ஆர்ச்சர் பந்தில் தோனி சிங்கிள் எடுத்த போது, வர்ணனை செய்துக் கொண்டிருந்த சவுரவ் கங்குலி கூறுைகயில், ‘இந்த சிங்கிளுக்கு நான் எந்த விளக்கமும் சொல்லப் போவதில்லை’ என்றார்.

கோடிக்கணக்கான பேர் பார்த்துக் கொண்டிருக்கும் போட்டியில், இவ்வளவு வெளிப்படையாகவே தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்லே, ‘போட்டியின் முடிவு அதிருப்தியளிப்பதாக இருந்தது.

ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற பார்ட்னர்ஷிப், ஒருபோதும் வெற்றியை தேடித்தராது’ என்றார். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ‘உலககோப்பை தொடரில் ஒவ்வொரு அணிக்கும் ஒரு தோல்வி அல்லது இரண்டு தோல்வி கிடைக்கும்.

இந்திய அணிக்கு இது அந்த மாதிரி போட்டி போல…’ என்றார்.

இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், ‘இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் குறித்து சொல்லிக்கொண்டே இருக்கலாம்.

அந்தளவிற்கு சிறப்பாக உள்ளது. இந்திய அணியை வென்றுள்ளது.

முதன்முறையாக உலககோப்பையையும் வென்று சாதனை படைக்கும்…’ என்றார். கிரிக்கெட் விமர்சகர் சித்து, ‘தோனியை மட்டும் எப்போதும் குறைசொல்லாதீர்கள்.

அவரை குறை சொல்பவர்கள், அவரின் கடந்த போட்டிகளின் செயல்பாடுகளை திருப்பி பாருங்கள்.

இந்த முறை அவர் சரியாக விளையாடவில்லை, அதற்காக, தோல்விக்கு அவரை பலிகடா ஆக்குவது நல்லதாக படவில்லை’ என்றார்.

.

மூலக்கதை