மழை வந்தால் ஆட்டம் தடைபடாமல் இருக்க மூடக்கூடிய மேற்கூரையில் டென்னிஸ்: விம்பிள்டன் சாம்பியன் போட்டியில் அறிமுகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மழை வந்தால் ஆட்டம் தடைபடாமல் இருக்க மூடக்கூடிய மேற்கூரையில் டென்னிஸ்: விம்பிள்டன் சாம்பியன் போட்டியில் அறிமுகம்

லண்டன்: லண்டன் ஆல் இங்கிலாந்து கிளப் சார்பில் 133வது விம்பிள்டன் சாம்பியன் டென்னிஸ் போட்டி நேற்று தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை நடக்கும் இப்போட்டியில் இறுதி செட்டில் ஸ்கோர் 12 ஆட்டங்கள் சமனில் இருக்கும் போது, ஒரு டை பிரேக் முறை கடைபிடிக்கப்படுகிறது.

7 புள்ளிகள் அல்லது அதை விட கூடுதல் புள்ளிகள் பெறும் வீரர் வெற்றி பெறுவார். மகளிர் பிரிவில் 128 போட்டியாளர்களில் 16 பேர் தகுதி பெறுவர்.

ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கும் இதே நடைமுறைதான்.
மழையால் ஆட்டங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, மூடக்கூடிய மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.   ஆடவர் தரவரிசை பட்டியலில் நடப்பு சாம்பியன் ஜோகோவிச் முதலிடத்திலும், பெடரர் 2, நடால் 3, கெவின் ஆண்டர்சன் 4, டொமினிக் தீம் 5, அலெக்சாண்டர் வெரேவ் 6, சிட்சிபாஸ் 7, கி நிஷிகோரி 8, ஜான் ஐஷ்நர் 9, காரேன் கச்சநோவ் 10 உள்பட 33 பேர் வரிசையாக இடம் பிடித்துள்ளனர்.

மகளிர் தரவரிசை பட்டியலில்,

 ஆஷ்லி பர்டி 1, ஓஸாகா 2, கரோலினா பிளிஸ்கோவா 3, கிகி பெர்டென்ஸ் 4, கெர்பர் 5, பெட்ரா கிவிட்டோவா 6, சிமோனா ஹலேப் 7, எலினா விட்டோலினா 8, ஸ்லோன் ஸ்டீபென்ஸ் 9, ஆர்யனா சபலென்கா 10 உள்பட 32 பேர் வரிசையாக இடம் பெற்றுள்ளனர். இதில், ஜோகோவிச் 5வது முறையாகவும், பெடரர் 9வது முறையாகவும், நடால் 3வது முறையாகவும் பட்டம் வெல்ல முயன்று வருகின்றனர்.

மகளிர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் போதிய ஆட்டத்திறன் இல்லாத நிலையில் ஆஷ்லி பர்டி, ஓஸாகா, பிளிஸ்கோவா, கெர்பர், கிகி பெர்டென்ஸ் ஆகியோர் பட்டத்துக்கு போட்டியிடுகின்றனர்.

தொடக்க நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், வாவ்ரிங்கா, கெவின் ஆண்டர்ஸன், கச்சனோவ் ஆகியோரும், மகளிர் பிரிவில் சிமோனா ஹலேப், பிளிஸ்கோவா, கொண்டவிட், மடிஸன் கீய்ஸ் ஆகியோர் முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.

.

மூலக்கதை